Tuesday, August 5, 2014


கிறிஸ்துராஜா பள்ளி
கடந்த ஒரு வாரமாக தோட்டத்தை பார்வையிட வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருகின்றது. பல துறை நண்பர்களிடம் இருந்து உதவிகள், சில இயற்கை ஆர்வலர்களின் அறிவுரைகள் என நாளும் பொழுதும் தோட்டத்தை சொழுமையாக்க உதவியாக இருக்கின்றது. தோட்டக்கலை சார்ந்த தேடலில் ஓர் செய்தி கிடைத்தது; புதிய தரிசனம் கணேசன் அவர்கள் பாளை கிறிஸ்து ராஜா பள்ளியில் அரை நாள் இலவச பயிற்சி (ஆகஸ்டு 3, 2014) நடத்த திட்டமிட்டுள்ளதாக.

இயற்கை விவசாயி இராஜபாண்டி, இயற்கை வேளாண் ஆலோசகர் ரைசா என வழக்கமான பட்டாளத்துடன் கிறிஸ்து ராஜா பள்ளிக்கு சொன்றோம். மதுரையில் இருந்து இன்னாசிமுத்து அவர்கள் வகுப்பு எடுக்க வந்திருந்தார்.

தோட்டக்கலை என்றவுடன் நாலு கீரை, இரண்டு காய்கறி செடி என முழு பாடத்தையும் பள்ளிகூட ஆசிரியர் போல ஒப்பிக்காமல், மக்களின் மனமறிந்து, இடை இடையே பல எடுத்துக்காட்டுகளோடு, நடைமுறை சிக்கல்களையும் விளக்கி அழகாக வகுப்பை கொண்டு சென்றார். இரண்டு மணி நேரமும் கூட்டத்தில் ஒருவர் கூட இருக்கையை விட்டு எழவில்லை! அவ்வளவு அழகாக வீட்டுத்தோட்டத்தின் அவசியம் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.


கைதட்டு

வகுப்பின் முடிவில் – வகுப்பு என்று சொல்வதைவிட கலந்துரையாடல் என்ற சொல் பொருத்தமாக இருக்கும்! கலந்துரையாடலின் முடிவில் கூட்டத்திற்கு வருகை தந்தோரின் அறிமுகம் நடைப்பெற்றது. ஒவ்வொருவராக தங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்க… இயற்கை விவசாயம் செய்வதாக இராஜபாண்டி சொல்லும்போது கூட்டத்தில் சிலர் கைதட்டி வரவேற்றது இயற்கையின் மீது மக்கள் கொண்டுள்ள காதலை வெளிக்காட்டியது. 

0 comments:

Post a Comment

Google+