Tuesday, March 29, 2016
Sunday, November 22, 2015
Monday, May 18, 2015


இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிறையவே வந்திருக்கிறது. ஏதாவது ஒரு ஊடகம் தினசரி இயற்கை விவசாயத்தின் நன்மைகள் மற்றும் அவசியம் குறித்து செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளனர். குறிப்பாக புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் இனியவை இன்று நிகழ்ச்சியில் அடிக்கடி இயற்கை விவசாயத்தைப் பற்றிய குறிப்புகளை கொடுத்து கொண்டு இருக்கின்றனர். நல்ல நிகழ்ச்சி (நிச்சயம் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்! - அரைகுறை ஆடை ஆட்டம் பாட்டம் இல்லையே..!!)
Wednesday, August 6, 2014


கடந்த வாரம் திருநெல்வேலியில் நடந்த புத்தக திருவிழாவில் தோழி சைலோ இந்தியா சுவாதி ஜான்சன் ஒரு புத்தகம் வாங்கியிருந்தார் – The vision of natural farming. எழுதியவர் Bharat Mansata என்பவர்.
முழுக்க முழுக்க இயற்கையை பற்றிய சிந்தனை தொகுப்பு. பொதுவாக இயற்கை பற்றி எழுதப்பட்டிருக்கும் புத்தகங்கள் என்றால் இரண்டு பக்கத்தை படித்து முடிப்பதற்குள் குறட்டை சத்தம் காதை கிழிக்கும். ஆனால், The vision of natural farming இதற்கு விதிவிலக்கு!
விறுவிறுப்பான திருப்பங்களை கொண்ட புதினத்தை போன்ற எழுத்து நடை. ஒவ்வொரு பக்கத்திலும் இயற்கையின் ஒழுங்கை பற்றி அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது! நாம் மறந்த, நேசம் காட்ட மறுத்த பலநுண்ணுயிர்களை பற்றியும், இப்பூவுலக பசுமை நிறைந்ததாக இருக்க இச்சிறு உயிரினங்களின் பங்களிப்பை பற்றியும் வரிக்கு வரி சொல்லப்பட்டுள்ளது.
தலைப்பு விவசாயம் தொடர்பான ஒன்றாக இருந்தாலும் புத்தகம் இயற்கை பற்றியும் அதன் அதிசயதக்க ஒழுங்கை பற்றியும் மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டே வருகின்றது. ஒவ்வொரு பக்கத்தை படிக்கும் போதும் நாம் இயற்கைவிட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கின்றோம் என்ற குற்ற உணர்வு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை!
இயற்கையின் நேர்தியை தெரிந்து கொள்ளும் போது மனிதன் என்ற அகந்தை மறைந்து விடுகிறது. இயற்கையை புரிந்து கொள்ள முயற்சிப்பவர்களும், இயற்கையை நேசிப்பவர்களும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் – The vision of natural farming.
Subscribe to:
Posts (Atom)