இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிறையவே வந்திருக்கிறது. ஏதாவது ஒரு ஊடகம் தினசரி இயற்கை விவசாயத்தின் நன்மைகள் மற்றும் அவசியம் குறித்து செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளனர். குறிப்பாக புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் இனியவை இன்று நிகழ்ச்சியில் அடிக்கடி இயற்கை விவசாயத்தைப் பற்றிய குறிப்புகளை கொடுத்து கொண்டு இருக்கின்றனர். நல்ல நிகழ்ச்சி (நிச்சயம் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்! - அரைகுறை ஆடை ஆட்டம் பாட்டம் இல்லையே..!!)
செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் இருக்கும் பரப்பரப்பு விற்பனையில் உள்ளதா என்று சிந்தித்தால் நிச்சயம் இல்லை என்றுதான் தெரிகிறது. பல இலட்சம் கொடுத்து (பெரும்பாலும் கடன் வாங்கி) கார் வாங்கும் மக்கள், கூடுதலாக 15,20 ரூபாய் கொடுத்து இயற்கை விவசாய பொருட்களை வாங்குவதில்லை..!
காருக்காக வாங்கிய கடனை கட்ட முடியாமல், கடனாளியாக இருப்பதால் கூடுதல் தொகை கொடுத்து நல்ல உணவுகூட வாங்க முடியாமல் திண்டாடும் வெற்று கெளருவகாரர்களை நினைத்தால் ஒருபக்கம் பரிதாபமாக இருக்கிறது. கடன் வாங்கி வீடு வாங்குகிறோம், கடன் வாங்கி கார் வாங்குகிறோம், கார் வாங்கியதால் கடன் வாங்கியாவது ஊர் சுற்றுகிறோம்...இப்படி பல லட்சம் கடனாளியாக இருப்பதில் சுகம் காண்கிறோம்...ஆனால் நல்ல உணவிற்க்கு கணக்கு பார்க்கிறோம்..!!
Monday, May 18, 2015
Unknown

Posted in
0 comments:
Post a Comment